Wednesday, November 24, 2010

களி(ழி)

கவிதைகளுடன் களிக்கிறேன்
என் கணங்களை
நான் உனைக் காதலித்த நாள் முதல்!

கண்ணீருடன் கழிக்கிறேன்
என் கனங்களை
நீ அவனைக் காதலித்த நாள் முதல்!

ஒரு எழுத்தின் விலை.

I love you da chellam,
I love you da
I love u
I L U

sms -ன் சுருக்கத்தில் உணர்ந்தேன்
உன் மன இறுக்கத்தை.
உடனே பதிலளித்தேன் 'K' என்று.

'Last call charges Rs:0.50'
உணர்த்தியது ஓர் எழுத்தின் விலையை.

COPY

நான் எழுதிய கவிதையை
எழுத்து மாறாமல் ஒப்பிக்கிறாய்!
எத்தனை முறை படித்தாய் என்றேன்.
ஒரே முறை அதுவும்
உனக்கு முன் என்றாய்.

இப்போது உணர்கிறேன் தமிழ் தேர்வில்
எனக்கு முன் அமர்ந்தவன் நீயென்று.

Wednesday, November 10, 2010

ஒரு கவிஞன் அசடாகிறான்


கவிஞனாய் வாழ்க்கை நடத்தி வரும் என்
கண்களில் நீ அகப்பட்டு விட்டாய்.
உடனே உன்னை கவிதையாக்க விழைந்தேன்.

ஆனால் நீயோ ,
உன் பச்சரிசி பல் சிரிப்பால்
மீன் நீந்தும் கண் சிமிட்டலால்
இசை மீட்டும் கால் கொலுசொலியால்
நிலவு ஒளி வீசும் வட்ட முகத்தால்
கூந்தல் வாசம் செய்யும் மல்லியின் வாசத்தால்
என் இதயத்தில் எழுதிவிட்டாய் உன் கவிதையை.


தினந்தோறும் படிக்கிறேன்.
படித்துவிட்டு உனைப் பார்கிறேன்.
நீயோ சிரிக்கிறாய் அசடு என்று கூறிக்கொண்டு.