சுட்டெரிக்கும் வெயிலில்
கல் உடைக்கும் குவாரியில்
பொறி தெறிக்க கல் உடைத்து
காய்த்த கரங்கள் எழுதிய தீர்ப்பு.
பகலவன் பார்த்து
கார் கணித்து ஏர் பிடித்து
நிலம் உழுது பயிர் அறுத்து
வயிர் நிரப்பும்
அன்னையின் கரங்கள் எழுதிய தீர்ப்பு!
ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
அனைவரையும் முழு மனிதனாக்கி
அழகு பார்க்க நித்தமும்
தறி அடித்து வலி கொண்ட
கரங்கள் எழுதிய தீர்ப்பு!
அம்மாவோ , அய்யாவோ
சிவப்பைத் தாண்டினால் ரூ.50
என்று பாரபட்சம் இன்றி
எவரிடத்திலும் நீளும்
காவல் கரங்கள்
எழுதிய தீர்ப்பு!
கோடான கோடி
கரங்கள் எழுதிய தீர்ப்பு
இன்று அறிவிக்கப்படும் நாள்!
கரங்கள் எழுதிய தீர்ப்பு
எதுவானாலும் சாதகம் தான்
கரை படிந்த கரங்களுக்கு.
சூரியனோ , இலையோ
பச்சை கொடி தான்
ஊழலுக்கு !
Monday, May 9, 2011
Sunday, May 1, 2011
தந்தையாய் சிந்திக்கையில்!
உனது முத்தங்களின் எண்ணிக்கையில்
அறிந்தேன் உனது வயதின் வருடங்களை.
உனது அணைப்பின் இறுக்கத்தில்
உள்ள வலியில் உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை.
ஆயிரம் தேசம் போய் வந்தேன்
எங்கேனும் காணவில்லை
உன் முகத்தில் காணும்
பரவசத்தை.
நூறு மொழியேனும் கேட்டிருப்பேன்
எவையேனும் மிஞ்சவில்லை
உன் மழலை மொழியை.
ஓர் விளையாட்டு வீரன் நான்
வெற்றிகளே எனக்கு சுகம் தரும்.
முதல் முறை மகிழ்கிறேன்
மகளே உன்னிடம்
நான் தோற்க்கையில்.
அறிந்தேன் உனது வயதின் வருடங்களை.
உனது அணைப்பின் இறுக்கத்தில்
உள்ள வலியில் உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை.
ஆயிரம் தேசம் போய் வந்தேன்
எங்கேனும் காணவில்லை
உன் முகத்தில் காணும்
பரவசத்தை.
நூறு மொழியேனும் கேட்டிருப்பேன்
எவையேனும் மிஞ்சவில்லை
உன் மழலை மொழியை.
ஓர் விளையாட்டு வீரன் நான்
வெற்றிகளே எனக்கு சுகம் தரும்.
முதல் முறை மகிழ்கிறேன்
மகளே உன்னிடம்
நான் தோற்க்கையில்.
Tuesday, December 28, 2010
தங்கையே வருக !
முந்தி பிறந்ததால் நீ அக்கா.
பிந்தி பிறப்பதால் அவள் தங்கை.
மார்கழியில் பூசொரிந்தாய்
தையில் பொங்கல் தந்தேன்
சித்திரையில் சினம் கொண்டு சுட்டெரித்தாய்
கார்த்திகையில் சொட்ட நனைந்து சுகம் தந்தாய்
உன்னை சந்தித்த நாள் முதல்
உன்னோடு நானிருந்தேன் என்னோடு நீயிருந்தாய்
சுகமும் தந்தாய். சோகமும் தந்தாய்
காதலும் தந்தாய் மோதலும் தந்தாய்
எனினும் ஓர் விநாடியேனும்
நமக்குள் பிரிவில்லை
உன்னிடம் எனக்கு கோபமும் இல்லை
பின்பு ஏன் என்னை விட்டு பிரிகிறாய்
நொடி பொழுதில் ?
வினாவிற்கு விடை அளிக்கிறாய்
காதோரத்தில் .
என் தங்கை வருகிறாள்
உனை கவனிக்க
என்னை விட வேகமானவள்
சமாளிக்க தயாராய் இரு
உனக்கும் ஓர் வயது கூடி இருக்குமென்று .
உன் தங்கை பெயர்? என்றேன்
என்னுடன் ஒன்றை கூட்டி விடு
2011 என்றாய்.
பிந்தி பிறப்பதால் அவள் தங்கை.
மார்கழியில் பூசொரிந்தாய்
தையில் பொங்கல் தந்தேன்
சித்திரையில் சினம் கொண்டு சுட்டெரித்தாய்
கார்த்திகையில் சொட்ட நனைந்து சுகம் தந்தாய்
உன்னை சந்தித்த நாள் முதல்
உன்னோடு நானிருந்தேன் என்னோடு நீயிருந்தாய்
சுகமும் தந்தாய். சோகமும் தந்தாய்
காதலும் தந்தாய் மோதலும் தந்தாய்
எனினும் ஓர் விநாடியேனும்
நமக்குள் பிரிவில்லை
உன்னிடம் எனக்கு கோபமும் இல்லை
பின்பு ஏன் என்னை விட்டு பிரிகிறாய்
நொடி பொழுதில் ?
வினாவிற்கு விடை அளிக்கிறாய்
காதோரத்தில் .
என் தங்கை வருகிறாள்
உனை கவனிக்க
என்னை விட வேகமானவள்
சமாளிக்க தயாராய் இரு
உனக்கும் ஓர் வயது கூடி இருக்குமென்று .
உன் தங்கை பெயர்? என்றேன்
என்னுடன் ஒன்றை கூட்டி விடு
2011 என்றாய்.
Wednesday, November 24, 2010
களி(ழி)
கவிதைகளுடன் களிக்கிறேன்
என் கணங்களை
நான் உனைக் காதலித்த நாள் முதல்!
கண்ணீருடன் கழிக்கிறேன்
என் கனங்களை
நீ அவனைக் காதலித்த நாள் முதல்!
என் கணங்களை
நான் உனைக் காதலித்த நாள் முதல்!
கண்ணீருடன் கழிக்கிறேன்
என் கனங்களை
நீ அவனைக் காதலித்த நாள் முதல்!
ஒரு எழுத்தின் விலை.
I love you da chellam,
I love you da
I love u
I L U
sms -ன் சுருக்கத்தில் உணர்ந்தேன்
உன் மன இறுக்கத்தை.
உடனே பதிலளித்தேன் 'K' என்று.
'Last call charges Rs:0.50'
உணர்த்தியது ஓர் எழுத்தின் விலையை.
I love you da
I love u
I L U
sms -ன் சுருக்கத்தில் உணர்ந்தேன்
உன் மன இறுக்கத்தை.
உடனே பதிலளித்தேன் 'K' என்று.
'Last call charges Rs:0.50'
உணர்த்தியது ஓர் எழுத்தின் விலையை.
COPY
நான் எழுதிய கவிதையை
எழுத்து மாறாமல் ஒப்பிக்கிறாய்!
எத்தனை முறை படித்தாய் என்றேன்.
ஒரே முறை அதுவும்
உனக்கு முன் என்றாய்.
இப்போது உணர்கிறேன் தமிழ் தேர்வில்
எனக்கு முன் அமர்ந்தவன் நீயென்று.
எழுத்து மாறாமல் ஒப்பிக்கிறாய்!
எத்தனை முறை படித்தாய் என்றேன்.
ஒரே முறை அதுவும்
உனக்கு முன் என்றாய்.
இப்போது உணர்கிறேன் தமிழ் தேர்வில்
எனக்கு முன் அமர்ந்தவன் நீயென்று.
Wednesday, November 10, 2010
ஒரு கவிஞன் அசடாகிறான்
கவிஞனாய் வாழ்க்கை நடத்தி வரும் என்
கண்களில் நீ அகப்பட்டு விட்டாய்.
உடனே உன்னை கவிதையாக்க விழைந்தேன்.
ஆனால் நீயோ ,
உன் பச்சரிசி பல் சிரிப்பால்
மீன் நீந்தும் கண் சிமிட்டலால்
இசை மீட்டும் கால் கொலுசொலியால்
நிலவு ஒளி வீசும் வட்ட முகத்தால்
கூந்தல் வாசம் செய்யும் மல்லியின் வாசத்தால்
என் இதயத்தில் எழுதிவிட்டாய் உன் கவிதையை.
தினந்தோறும் படிக்கிறேன்.
படித்துவிட்டு உனைப் பார்கிறேன்.
நீயோ சிரிக்கிறாய் அசடு என்று கூறிக்கொண்டு.
Subscribe to:
Posts (Atom)