ஒரு கவிஞன் அசடாகிறான்
கவிஞனாய் வாழ்க்கை நடத்தி வரும் என்
கண்களில் நீ அகப்பட்டு விட்டாய்.
உடனே உன்னை கவிதையாக்க விழைந்தேன்.
ஆனால் நீயோ ,
உன் பச்சரிசி பல் சிரிப்பால்
மீன் நீந்தும் கண் சிமிட்டலால்
இசை மீட்டும் கால் கொலுசொலியால்
நிலவு ஒளி வீசும் வட்ட முகத்தால்
கூந்தல் வாசம் செய்யும் மல்லியின் வாசத்தால்
என் இதயத்தில் எழுதிவிட்டாய் உன் கவிதையை.
தினந்தோறும் படிக்கிறேன்.
படித்துவிட்டு உனைப் பார்கிறேன்.
நீயோ சிரிக்கிறாய் அசடு என்று கூறிக்கொண்டு.
No comments:
Post a Comment