Wednesday, November 24, 2010

களி(ழி)

கவிதைகளுடன் களிக்கிறேன்
என் கணங்களை
நான் உனைக் காதலித்த நாள் முதல்!

கண்ணீருடன் கழிக்கிறேன்
என் கனங்களை
நீ அவனைக் காதலித்த நாள் முதல்!

ஒரு எழுத்தின் விலை.

I love you da chellam,
I love you da
I love u
I L U

sms -ன் சுருக்கத்தில் உணர்ந்தேன்
உன் மன இறுக்கத்தை.
உடனே பதிலளித்தேன் 'K' என்று.

'Last call charges Rs:0.50'
உணர்த்தியது ஓர் எழுத்தின் விலையை.

COPY

நான் எழுதிய கவிதையை
எழுத்து மாறாமல் ஒப்பிக்கிறாய்!
எத்தனை முறை படித்தாய் என்றேன்.
ஒரே முறை அதுவும்
உனக்கு முன் என்றாய்.

இப்போது உணர்கிறேன் தமிழ் தேர்வில்
எனக்கு முன் அமர்ந்தவன் நீயென்று.

Wednesday, November 10, 2010

ஒரு கவிஞன் அசடாகிறான்


கவிஞனாய் வாழ்க்கை நடத்தி வரும் என்
கண்களில் நீ அகப்பட்டு விட்டாய்.
உடனே உன்னை கவிதையாக்க விழைந்தேன்.

ஆனால் நீயோ ,
உன் பச்சரிசி பல் சிரிப்பால்
மீன் நீந்தும் கண் சிமிட்டலால்
இசை மீட்டும் கால் கொலுசொலியால்
நிலவு ஒளி வீசும் வட்ட முகத்தால்
கூந்தல் வாசம் செய்யும் மல்லியின் வாசத்தால்
என் இதயத்தில் எழுதிவிட்டாய் உன் கவிதையை.


தினந்தோறும் படிக்கிறேன்.
படித்துவிட்டு உனைப் பார்கிறேன்.
நீயோ சிரிக்கிறாய் அசடு என்று கூறிக்கொண்டு.

Saturday, July 10, 2010

சிவப்பு கவிதை :


ஆடியில் ஒரு 'ஆடி' வாங்கிவிட வேண்டும்
என்பது ஒருவனின் கணக்கு .

ஆடியில் ஒரு ஆடை வாங்கிவிட வேண்டும்
என்பது மற்றொருவனின் கணக்கு .

இருவர்ருக்கும் உள்ள ஒற்றுமை
துணி கடையில் . ஆனால்

வேற்றுமையோ பல மையில்கள்
இருவர்க்குமிடையில் .

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை
காண்பது என்பதோ .

Wednesday, July 8, 2009

அன்புள்ள மனிதனுக்கு .......

சிந்திக்க மறந்த எங்களை
தண்டித்து வரும் உங்களை
தண்டிக்க மிருக வதைச் சட்டம்
செய்ததற்கு நன்றி !

கூரிய நகங்களும் ,கொடூர பற்களுமே
எங்களின் கொடிய ஆயுதங்கள் .
அவற்றையும் நீ மழுங்கடித்த போது
நினைத்தோம் மனிதன் வீரனாக
வாழத் தொடங்கிவிட்டான் என்று !

ஆனால் இன்றோ ,
உன்னையும் சாம்பலாக்கி
எங்களையும் சாம்பலாக்கி
நம் சந்ததிகளையும் சாம்பலாக்கும்
அணுகுண்டைத் தயாரித்து விட்டு
மார்தட்டுகிறாய் விஞ்ஞான
விந்தை என்று !
ஆனால் உண்மையில் நீ அழைகிறாய்
விஷத்தை வயிற்றில் கட்டிக் கொண்டு !

ஆடைகள் கட்டி கொண்டு
நாகரீகம் என்றாய் !
அந்த ஆடைகளை குறைத்து
மேடையில் வலம் வரும்
பூனை நடைகளை நவநாகரீகம் என்கிறாய் !
ஏனிந்த முரண்பாடு உனக்குள் !

முன்னேற்றம் முன்னேற்றம்
என்று முணங்குகிறாய்
எதுவரை என்பதை மட்டும் மறைக்கிறாய்
கேட்டால் முடிவிலி என்கிறாய்
பகுதியே சுழியாய் இருக்க
எதைத் தொகுக்க விரும்புகிறாய் ?

என்றும் அன்புடன் ,
காட்டு ராஜா ,

Wednesday, May 13, 2009

என் உயிர் தந்தவளுக்கு .............

கரு விழி திறக்கும் முன்பே
கருவறையில் சுவாசம் தந்தாய்!

நான் என் இரு விழி திறந்த பின்
உன் பெரு வலி மறந்து சிரித்தாய்!

உறங்க மறுத்த என் விழிகளை
உன் பாடலால் உறங்க வைத்து
நான் ரசித்த முதல் பாடகி ஆனாய் !

மொழி அறியா மிருகம்
ஆகி இருப்பேன்
அம்மா எனும் விதை விதைத்து
என் நாவில் தாய் மொழியைப்
படர வைத்தாய் !

அத்தமிழ் மொழியில் உனக்கு அன்னையர் தின
வாழ்த்துகள் சொல்ல யோசித்தேன் .
ஓராயிரம் வரிகள் வந்து போனது என்னுள்

நானோ காத்திருக்கிறேன்
உனது பிறந்த நாளிற்காக!